தம்பதி விஷம் குடித்து தற்கொலை
மேலகிருஷ்ணன்புதூர் அருகே மகன் காதல் திருமணம் செய்ததால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மேலகிருஷ்ணன்புதூர்:
மேலகிருஷ்ணன்புதூர் அருகே மகன் காதல் திருமணம் செய்ததால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள ராமன்புதூரை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள் (வயது 56), கூலி தொழிலாளி. இவரது மனைவி பூபதி (47). இவர்களுக்கு தனலட்சுமி (24) என்ற மகளும், வெங்கடேஸ்வரன் (21) என்ற மகனும் உள்ளனர். மகள் முதுகலை பட்டப்படிப்பு படித்துவிட்டு நெல்லையில் ஒரு தனியார் கல்லூரியில் வேலைபார்த்து வருகிறார். மகன் வெங்கடேஸ்வரன் 11-ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஏ.சி. மெக்கானிக் வேலைக்கு சென்று வருகிறார்.
இந்தநிலையில் மகன் வெங்கடேஸ்வரன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணை அழைத்து சென்று காதல் திருமணம் செய்து ெகாண்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர் பெற்றோரை விட்டு பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருகிறார்.
தம்பதி தற்கொலை
இதனால் வேலாயுத பெருமாளும், அவரது மனைவியும் மிகுந்த மன வேதனை அடைந்தனர். மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர். அவர்களை உறவினர்கள் தேற்றி வந்தனர்.
இந்தநிலையில், நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து விட்டு மயங்கி விழுந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகன் காதல் திருமணம் ெசய்ததால் கணவன்-மனைவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story