மதுரவாயலில் ரூ.22 கோடி கோவில் நிலம் மீட்பு; அறநிலையத்துறை நடவடிக்கை
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள மார்க்கசகாயேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு கோவில் வசம் கொண்டுவரப்பட்டது.
கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமித்து உள்வாடகைக்கு விட்டு சட்டத்துக்கு புறம்பாக அனுபவித்து வந்த நபர்கள் மீது வெளியேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு 11 ஆயிரத்து 512 சதுரடி பரப்பளவில் உள்ள 4 ஆக்கிரமிப்பு மனைகளில் உள்ள மொத்தம் 7 கடைகள் மற்றும் காலியாக இருந்த ஒரு கட்டிடம் ஆகியவற்றை இலாகா முத்திரையிட்டு சுமார் ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துகள் கோவில் வசம் கொண்டு வரப்பட்டது.
அப்போது சென்னை மண்டல உதவி கமிஷனர் பெ.க.கவெனிதா, போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story