தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பக்கவாத நோயக்கு சிறப்பு மருந்து மூலம் சிகிச்சை டீன் நேரு தகவல்


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்  பக்கவாத நோயக்கு சிறப்பு மருந்து மூலம் சிகிச்சை டீன் நேரு தகவல்
x
தினத்தந்தி 28 Sept 2021 5:11 PM IST (Updated: 28 Sept 2021 5:11 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பக்கவாத நோயக்கு சிறப்பு மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக, டீன் நேரு தெரிவித்தார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பக்கவாத நோய்க்கு சிறப்பு மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் நேரு கூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
பக்கவாத நோய்க்கு சிறப்பு மருந்து
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பக்கவாத நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள சிறப்பு மருந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து உள்ளது. இதன் மூலம் பக்கவாத நோய்க்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 4 முதல் 5 மணி நேரத்துக்குள் ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டால், நோயாளியை முழுமையாக குணப்படுத்தி பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். அதன்படி சமீபத்தில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டால் பேச்சு வராமை, உணர்வு இல்லாத நிலை, தள்ளாடுதல், மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர வேண்டும். 
மருத்துவ காப்பீடு திட்டம்
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திலும் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு டீன் நேரு கூறினார்.

Next Story