தூய்மைப்பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்
தூய்மைப்பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் தாட்கோ மூலமாக 2008ம் ஆண்டு முதல் தூய்மை பணிபுரிவோர் நல வாரியம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 247 உறுப்பினர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நகராட்சிகள் பேரூராட்சிகள் கிராம ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்புசாரா தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டு கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, கண் கண்ணாடி வாங்க உதவித்தொகை விபத்து காப்பீட்டு திட்டம் இயற்கை மரண உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இந்த நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அமைப்பு சாரா தூய்மை பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதற்கான விண்ணப்பத்தை பெற்று சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் உதவி செயற்பொறியாளர் செயல் அலுவலர் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரில் ஒருவரின் கையொப்பத்துடன் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் அறை எண்.503 5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் திருப்பூர் 641604 என்ற முகவரியிலும் 0421 2971112 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
----
Related Tags :
Next Story