மக்களைத்தேடி மருத்துவ முகாம்


மக்களைத்தேடி மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 28 Sept 2021 6:00 PM IST (Updated: 28 Sept 2021 6:00 PM IST)
t-max-icont-min-icon

மக்களைத்தேடி மருத்துவ முகாம்

காங்கேயம்
தமிழக அரசின் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ வாகனம் மூலம் சர்க்கரை வியாதி, உயர்ரத்த அழுத்தம், முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு அதற்குரிய மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காங்கேயம் அருகே உள்ள சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நேற்று காங்கேயம் ஒன்றியம், பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட நால்ரோடு, சின்ன பரஞ்சேர்வழி ஆகிய கிராமப்பகுதிகளுக்கு முடநீக்கியல் டாக்டர் சங்கீதா, டாக்டர் பிரைட்சிங் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கிராமப்பகுதிகளில் உள்ள படுத்த படுக்கையாக மருத்துவமனைக்கு வர முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கி சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் தினசரி காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு பகுதியாகச் சென்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.


Next Story