அரசு பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா
அரசு பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா
குன்னத்தூர்
குன்னத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 11 ம் வகுப்பு மாணவிக்கு கொரோனோ தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி இருவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு மாணவிகளும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதையடுத்து குன்னத்தூர் மற்றும் வெள்ளிரவெளி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர் ஆசிரியைகள் என மொத்தம் 200 பேருக்கு கொரோனோ செய்தனர். அதே போல் பல்லகவுண்டன்பாளையம் சரவண புரத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 340 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கோரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த தகவலை குன்னத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் சரவணன் பிரபு தெரிவித்தார்.
Related Tags :
Next Story