காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் குன்னவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு


காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் குன்னவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 28 Sept 2021 6:19 PM IST (Updated: 28 Sept 2021 6:19 PM IST)
t-max-icont-min-icon

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் குன்னவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட அனுமந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் எ.சத்யா. பட்டதாரியான இவர், தி.மு.க.வில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.

இதற்கு முன்பு இவர் குன்னவாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவராக பதவி வகித்தார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் குன்னவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சத்யா போட்டியின்றி அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு தி.மு.க. பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Next Story