கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பழனி அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெய்க்காரப்பட்டி:
பழனி அருகே உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்தவர் பட்டுராஜ் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை.
இதனால் மனம் உடைந்த பட்டுராஜ், கோதைமங்கலம் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த பட்டுராஜூக்கு, முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story