மரக்கன்று நடும் விழா


மரக்கன்று நடும் விழா
x
தினத்தந்தி 28 Sept 2021 7:07 PM IST (Updated: 28 Sept 2021 7:07 PM IST)
t-max-icont-min-icon

பசுமை சூழல் திட்டத்தின் கீழ் வி.புதுக்கோட்டை ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள வி.புதுக்கோட்டை ஊராட்சி தோப்புப்பட்டியில், பசுமை சூழல் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவுக்கு வி.புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.குப்புச்சாமி தலைமை தாங்கினார். 

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைசாமி, ஒன்றிய பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஊராட்சி மன்ற செயலர் லோகநாதன் வரவேற்றார். விழாவில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தினேஷ்குமார் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்து மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். 

இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாக்கியம் மகாமுனி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் செந்தில்குமார், மணிகண்டன், பரமேஷ்வரி, சித்ரா, கவிதா, பரமசிவம், சக்திவேல், ராணி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

Next Story