உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது


உரிமையாளர் உள்பட 4  பேரை போலீசார் கைது
x
தினத்தந்தி 28 Sept 2021 7:54 PM IST (Updated: 28 Sept 2021 7:54 PM IST)
t-max-icont-min-icon

பெருமாநல்லூரில் அடிதடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவரை கொலை செய்த டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெருமாநல்லூர்
பெருமாநல்லூரில் அடிதடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவரை கொலை செய்த டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 4  பேரை போலீசார் கைது செய்தனர். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கொலை
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பாபுராஜா வயது 37. இவரது பெற்றோர் திருப்பூரில் உள்ள வாஷிங்டன் நகரில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று இவர் பெற்றோரை பார்க்க வாஷிங்டன் நகர் வந்தார். பின்னர் பெற்றோரை பார்த்து விட்டு, சின்னமனூர் செல்ல பெருமாநல்லூர் பஸ் நிலையத்திற்கு சென்றார். 
பின்னர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக்  பாருக்கு சென்று, பணம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பார் ஊழியர்களுக்கும்,  பாபுராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் பாபுராஜாவை அங்கிருந்த ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதில் பாபுராஜா காயம் அடைந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு பாபுராஜா திடீரென இறந்தார்.
 4 பேர் கைது
இதுகுறித்து தகவலறிந்த பெருமாநல்லூர் போலீசார், பாபுராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பார் ஊழியர்கள் தாக்கியதால் பாபுராஜா இறந்தது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பார் உரிமையாளர் கண்ணப்பன்  ஊழியர்கள் ராமச்சந்திரன்  உதயசந்துரு  முனியசாமி  ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ரஞ்சித் என்பவரை தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பாபுராஜா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
சாலை மறியல்
முன்னதாக கொலை செய்யப்பட்ட பாபுராஜாவின் உடல்  பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்சில் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வாஷிங்டன் நகர் பஸ் நிறுத்தத்தில் பாபுராஜா உறவினர்கள், பாபுராஜாவை கொன்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story