சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் ‘போக்சோ’வில் கைது
வேதாரண்யம் அருகே சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நண்பர்கள்
நாைக மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் போலீஸ் சரகம் மருதூர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 26). மருதூர் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் துரைமுருகன்(20). இருவரும் நண்பர்கள்.
மருதூர் வடக்கு கிராமத்தில் ஆனந்த் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். துரைமுருகன் அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ஆனந்துக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
சிறுமியை கடத்தி திருமணம்
இந்த நிலையில் 11-ம் வகுப்பு படித்து வந்த 16 வயதான ஒரு சிறுமி, கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் சாலை அமைக்கும் பணிக்கு சென்று வந்ததாக தெரிகிறது.
இந்த சிறுமியை சம்பவத்தன்று ஆனந்தும் அவரது நண்பர் துரைமுருகனும் சேர்ந்து கடத்தி சென்றுள்ளனர். பின்னர் ஆனந்த், அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
போக்சோ சட்டத்தில் 2 பேரும் கைது
இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தையும், துரைமுருகனையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேதாரண்யம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story