சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது
காட்பாடி
காட்பாடியை அடுத்த தொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். (வயது 31). இவருக்கு, லத்தேரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த ஆகஸ்டு மாதம் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து அந்த சிறுமி ஹெல்ப் லைன் மூலம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவித்துள்ளாள்.
அதன்பேரில் சமூகநலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து லத்தேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த பெருமாள், திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பாட்டி குமாரி (வயது 60) ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Related Tags :
Next Story