100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
குருவராஜபேட்டையில் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பத விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர், கலெக்டர் கலந்துகொண்டனர்.
அரக்கோணம்
குருவராஜபேட்டையில் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பத விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் தேர்தல் பார்வையாளர், கலெக்டர் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு ஊர்வலம்
அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை கிராமத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் சுய உதவிக் குழு சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேர்தல் நாள் குறித்த வரை படத்தையும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகளை பல வண்ணங்களில் கோலங்களாக வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த உறுதி மொழியினை பொதுமக்கள் மற்றும் சுயஉதவி குழுவினர், கலெக்டர் முன்னிலையில் எடுத்துக்கொண்டனர். பின்னர் கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்திட்டு, மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தையும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
ஆய்வு
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சாந்தா கலந்துகொண்டு பார்வையிட்டார். தொடர்ந்து வாக்கு எண்ணும் மையமான ஸ்ரீ கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நிகழ்ச்சிகளில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன், மகளிர் உதவி திட்ட அலுவலர்கள் பெர்லினா, சுபாஷ், சாகுல் அமீத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story