மதுபாட்டிலில் கரப்பான்பூச்சி கிடந்ததால் பரபரப்பு


மதுபாட்டிலில் கரப்பான்பூச்சி கிடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Sept 2021 11:46 PM IST (Updated: 28 Sept 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் மதுபாட்டிலில் கரப்பான்பூச்சி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 

ராமநாதபுரத்தை அடுத்துள்ள சூரங்கோட்டை அருகே உள்ள களத்தாவூரை சேர்ந்தவர் கபில்தாஸ். இவர் கடந்த 2-ந் தேதி முதுகுளத்தூர் அருகே உள்ள கிராமத்தில் உறவினர் இல்ல காதணி விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது கீழசிறுபோது கிராமத்தில் உள்ள மதுக்கடையில் மது வாங்கி உள்ளார். அந்த மதுபாட்டிலை வாங்கி குடிப்பதற்காக திறக்க முயன்றபோது கபில்தாஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த மதுபாட்டிலில் கரப்பான்பூச்சி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனால் அந்த மதுவை குடிக்காமல் புகார் அளிக்க முடிவு செய்தார். இதனை தொடர்ந்து அந்த மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி இருப்பது குறித்து ராமநாதபுரம் வந்த கபில்தாஸ் உணவுபாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமாரிடம் புகார் செய்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மதுபாட்டிலில் கரப்பான்பூச்சி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story