பாலாறு அணைக்கட்டில் குளித்த எலக்ட்ரீசியன் தண்ணீரில் மூழ்கி பலி
எலக்ட்ரீசியன் தண்ணீரில் மூழ்கி பலி
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தேவதானம் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 32). மெக்கானிக்கான இவர் உடல் ஊனமுற்றவர். இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களான ஜே.ஜே.நகரை சேர்ந்த வினாயகம், குடிமல்லூர் பகுதியை சேர்ந்த நவீன் ஆகியோருடன் வாலாஜாவை அடுத்த பாலாறு அணைக்கட்டில் குளிப்பதற்காக சென்றுள்ளார். குளித்துக்கொண்டிருந்த போது சதீஷ் ஆழமான பகுதிக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இது குறித்து வாலாஜா போலீஸ் நிலையம் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று சதீஷ் பிணமாக மீட்கப்பட்டார். உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பிவைத்தனர்.
மேலும் வாலாஜா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story