மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த 2 பேர் கைது
டீயில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்,
கரூர் அருகே உள்ள செல்லாண்டி பாளையம் போத்தனூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாச்சியம்மாள் (வயது 60). திருப்பூர் மாவட்டம் கருப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மது என்கிற பூபதி (28) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிற்றரசன் (40) ஆகியோர் நாச்சியம்மாள் வீட்டிற்கு அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியிருந்து வந்துள்ளனர். இதையடுத்து வீட்டை காலி செய்து விட்டு சென்றவர்கள் சம்பவத்தன்று நாச்சியம்மாள் வீட்டிற்கு வந்து அவரிடம் பேச்சு கொடுத்ததுடன் நாச்சியம்மாளுக்கு டீ போட்டு தருவதாக கூறி அதில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து உள்ளனர்.
இதில் நாச்சியம்மாள் மயங்கிய நிலையில் அவர் அணிந்திருந்த 5½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் நாச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து பூபதி மற்றும் சிற்றரசன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story