மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்குடியில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்குடி,

ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 70 மாத டி.ஏ.வை அரியருடன் உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கடந்தாண்டு மே மாதம் முதல் உயிரிழந்த மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் பவுல்ராஜ் சிறப்புரையாற்றினார். மணிக்கண்ணு, வெங்கடேசன், மாணிக்கம், கேசவன், என்.மாணிக்கம் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் மண்டல பொருளாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன் சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
3. நூல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நூல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் ராஜபாளையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. தொழிலாளர் சங்க தேர்தல் நடத்தக்கோரி காகித ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் சங்க தேர்தல் நடத்தக்கோரி காகித ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது