தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம்


தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 28 Sep 2021 7:02 PM GMT (Updated: 28 Sep 2021 7:02 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வருகிற 6,9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியிலும் மற்றும் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கிருஷ்ணாபுரத்தில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீமைசாமி தலைமையில் நடந்தது.
அப்போது அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார். மேலும் வாக்குச்சாவடிகளில் ஏதேனும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும், மாவட்ட காவல் அலுவலகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசார் அனைவரும் கொரோனா தடுப்பு முறைகளை முறையாக பின்பற்றி முகக்கவசம் அணிந்து பணியில் இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்ணபாஸ், ‌இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், வாக்குப் பெட்டி பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட போலீசார், அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story