தொழிலாளியை மிரட்டிய வாலிபர் கைது


தொழிலாளியை மிரட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2021 1:02 AM IST (Updated: 29 Sept 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தொழிலாளியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை டவுன் கருவேலங்குன்று தெருவைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 30). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சீவலப்பேரியை சேர்ந்த பூல் பாண்டி (27), ஜெகனிடம் கத்தியை காட்டி மது அருந்த ரூ.500 கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரிய பிரான்சிஸ் சேவியர் வழக்கு பதிவு செய்து, பூல் பாண்டியை கைது செய்தார்.

Next Story