ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2021 1:09 AM IST (Updated: 29 Sept 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர்நல அமைப்பின் சார்பாக மண்டலத்தலைவர் போஸ் தலைமையிலும் செயலாளர் தங்கப்பழம்பொருளாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மருத்துவ படியை ரூ. 300ஆக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள மருத்துவ ப்படியை உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த உயர்வு நிலுவைகள் வழங்கப்பட வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும். பணிக்காலத்தில் வழங்கவேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். மே 2020-ல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய விருப்புரிமை மற்றும் மருத்துவ தகுதியின்மை, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை போன்ற நிலுவைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Next Story