பணம் பறித்த 4 பேர் கைது


பணம் பறித்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2021 1:29 AM IST (Updated: 29 Sept 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 23). சுமை தூக்கும் தொழில் செய்து வரும் இவர் சிவகாசி-பள்ளப்பட்டி ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வேல்முருகன் (27), கார்த்திக் என்கிற ஊளைக்காது (28), முனியசாமி என்கிற பொசுங்கன் (32) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.470-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பாலமுருகன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதே போல் விருதுநகர் பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி(29). இவர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக முனீஸ்நகரை சேர்ந்த செல்வம் (34) என்பவர் வந்து கொண்டிருந்தார். அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். இது குறித்து செல்வம் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

Next Story