போட்டி தேர்வு பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வருமா?


போட்டி தேர்வு பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வருமா?
x
தினத்தந்தி 29 Sept 2021 1:33 AM IST (Updated: 29 Sept 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

போட்டி தேர்வு பயிற்சி மையத்தினை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர், 
போட்டி தேர்வு பயிற்சி மையத்தினை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். 
போட்டி தேர்வு பயிற்சி மையம் 
விருதுநகர் மாவட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக படித்த இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் போட்டி தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்படவேண்டும்என்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில் பொது நூலகத்துறை சார்பில் போட்டி தேர்வு பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் தொழில் நிறுவனத்தின் நிதியுதவியுடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் போட்டி தேர்வு பயிற்சி மையத்திற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ள போதிலும் ஊரடங்கு காரணமாக பயன்பாட்டிற்கு வராத நிலையில கொரோனா ஊரடங்கு காரணமாக முடக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பல்வேறு போட்டி தேர்வுகளை அறிவித்து உள்ளது. எனவே வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள உரிய வழிகாட்டல் இல்லாமல் பெரும் தவிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.

வழிகாட்டுதல் 
தனியார் போட்டி தேர்வு மையங்கள் ஆங்காங்கே செயல்பட்டு வரும் நிலையிலும் அரசு போட்டி தேர்வு பயிற்சி மையம் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் முடங்கியுள்ளது. 
பள்ளி, கல்லூரிகள் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் போட்டி தேர்வு பயிற்சி மையத்தினையும் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை. போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள உள்ள படித்த இளைஞர்களுக்கு உரிய வழிகாட்டல் வழங்கும் வகையில் போட்டி பயிற்சி தேர்வுமையத்தினை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர். 
 தனித்திறன் மேம்பாட்டில் இம்மாவட்டம் பின்னடைந்துள்ளது என சமீபத்தில் ஆய்வுக்கு வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்த நிலையில் மாவட்ட நிர்வாகம்  இளைஞர்களின் தனித்திறனை மேம்படுத்த போட்டி தேர்வு மையத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

Next Story