சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு


சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு
x
தினத்தந்தி 29 Sept 2021 1:39 AM IST (Updated: 29 Sept 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு நடந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பைரவ அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் வடுக பைரவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பன்னிரு திருமுறைகள், பைரவ அஸ்ட்டோத்ரம், சிவபுராணம் ஓதப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

Next Story