சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது


சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2021 1:40 AM IST (Updated: 29 Sept 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் குமரவேல். இவர் வெம்பக்கோட்டை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கொங்கலாபுரத்தை சேர்ந்த முருகன் (வயது 23) என்பவர் வீச்சு அரிவாளுடன் நடுரோட்டில் நின்று கொண்டு பொது மக்களை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் அங்கிருந்து செல்லுமாறு முருகனை வலியுறுத்தியுள்ளார். அதற்கு முருகன் வீச்சு அரிவாளை காட்டி மிரட்டி அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் டவுன் போலீசில் புகார்கொடுத்தார். அந்த புகாரில் தன்னை அரசு பணி செய்யவிடாமல் தடுத்து அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி இருந்தார். புகாரின் பேரில் போலீசார், முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story