சாவிலும் இணை பிரியாத தம்பதி
சாவிலும் தம்பதி இணை பிரியவில்லை.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள சிறுநிலா கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 76). இவரது மனைவி ராமாயி (71). இவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 மகன்கள். இதில் 2 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். மற்ற 2 பேருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
மனைவியுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த ராமசாமி அவ்வப்போது அவருடன் சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராமசாமி கடந்த 25-ந் தேதி உயிரிழந்தார். இதனால் துக்கம் தாங்க முடியாத ராமாயி மிகவும் சோகத்துடன் காணப்பட்டார். மறுநாள் ராமசாமியின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு ராமாயியும் திடீரென உயிரிழந்தார்.
இதையடுத்து உறவினர்கள், 2 பேரின் உடல்களையும் ஒன்றாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story