100 லிட்டர் சாராயம் வைத்திருந்தவர் கைது
100 லிட்டர் சாராயம் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு விரோதமாக சாராயம் காய்ச்சும், வைத்திருக்கும், விற்கும் செயல்களுக்கு எதிராக சிறப்பு சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று குன்னம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான குழு சோதனை செய்தபோது சில்லக்குடி மேத்தால், காட்டுக்கொட்டகையை சேர்ந்த செல்லமுத்து என்பவர் சட்டத்திற்கு விரோதமாக சாராயம் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி துரிதமாக செயல்பட்டு செல்லமுத்து வீட்டிற்கு சென்று சோதனையிட்டதில் அவர் வீட்டின் அருகே மாட்டு சாணம் கொட்டும் இடத்தில் மறைத்து வைத்திருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 டயர் டியூப்பில் நிரப்பப்பட்ட சுமார் 100 லிட்டர் சாராயத்தை போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் செல்லமுத்துவை கைது செய்து, கைப்பற்றப்பட்ட சாராயத்தை அதே இடத்தில் அழித்தனர். சாராயம் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பாராட்டினார்.
Related Tags :
Next Story