சாலையோரம் மீட்கப்பட்ட பெண் சாவு


சாலையோரம் மீட்கப்பட்ட பெண் சாவு
x
தினத்தந்தி 29 Sept 2021 1:51 AM IST (Updated: 29 Sept 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் சாலையோரம் மீட்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.

ராஜபாளையம்,
ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு சாலையின் ஓரமாக நோய்வாய்ப்பட்டு கிடந்த பெண்ணை அந்த வழியாக சென்றவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர்  மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்தார். இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் மலையரசி (வயது 50) என்பது தெரியவந்தது. அந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story