அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை சார்பில் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை சார்பில் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை- கலெக்டர் தகவல்
மதுரை
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு கொள்முதல் செய்ய வருங்காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.
அரசாணை
மதுரை மாவட்டத்தில் மாதத்திற்கு ஒரு முறை விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெறும். கொரோனா காரணமாக பல மாதங்கள் நடத்தப்படாமல் இருந்த இந்த கூட்டம் அதன் பின் காணொலி காட்சி மூலம் நடந்தது. ஆனால் இந்த மாதத்திற்கான கூட்டம் நேரிடையாக நடக்கும் என்று கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்து இருந்தார். அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
பெரியாறு அணையில் இருந்து வாய்க்கால்களில் திறக்கப்படுவது தொடர்பான அரசாணை மிகவும் பழமையானது. தற்போது பல இடங்களில் விவசாயம் நடைபெறாமல் பிளாட்டுகளாக மாறி விட்டது. எனவே இந்த அரசாணையை தற்போது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும். 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும்.
சர்க்கரை ஆலை
அதனை தடுப்பதற்கு அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் கரும்புகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும். கூட்டுறவு துறை மூலம் நடைபெறும் நெல்கொள்முதல் பணிகள் சிறப்பாக உள்ளது. ஆனால் அங்கு ஈரப்பதம் இல்லாத நெல்லை கொண்டு வர அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் மழைகாலமாக இருப்பதால் ஈரப்பதம் இருக்கிறது. எனவே அங்கு டிரையர் எந்திரம் வைக்க வேண்டும். கேரளாவில் 100 நாள் வேலை திட்டத்தில் தனியார் விவசாய நிலங்களில் களை எடுக்க ஊழியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அதில் பாதி சம்பளம் அரசும், பாதி சம்பளம் நில உரிமையாளர்களும் தருகின்றனர். மதுரையிலும் இது போல் செயல்படுத்த வேண்டும்.
ஒரே சர்வே எண்ணில் பல சப்-டிவிஷன் நம்பர்கள் உள்ளன. அதில் ஒரு நம்பர் பிளாட்டாக மாற்றப்பட்டால் மற்ற நம்பர்களில் உள்ள விவசாய நிலங்களின் மதிப்பும் அதிகரிக்கப்படுகிறது. அதனால் நாங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறோம். இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். பூ மார்க்கெட் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story