பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் கைது


பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய  கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2021 2:50 AM IST (Updated: 29 Sept 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

மாணவியை கர்ப்பம் ஆக்கிய கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

குளச்சல்:
மாணவியை கர்ப்பம் ஆக்கிய கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
மாணவியுடன் பழக்கம்
சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் புதுக்கிராமம் காலனியை சேர்ந்தவர் ராம் நரேஷ்குமார் (வயது 19). நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். 
இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அப்போது அதே பள்ளியில் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த மாணவியும் படித்து வந்தார். 
அப்போது ராம்நரேஷ்குமாருக்கும் அந்த மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தை பயன்படுத்தி மாணவியை ராம் நரேஷ்குமார் காதல் வலையில் விழ வைத்ததாக கூறப்படுகிறது.
கர்ப்பமானார் 
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் ஒருநாள் மாணவி மட்டும் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ராம் நரேஷ்குமார் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
தனிமையில் இருந்தபோது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகும் 4 முறை அந்த மாணவியை தனிமையில் சந்தித்து பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. தற்போது அந்த மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். 
இந்த நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அவரின் தாயார் கண்டு பிடித்தார். அதைத்தொடர்ந்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
கைது
இதனால் மாணவியின் தாயார் அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராம் நரேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குப்பதிவு செய்துஅவரை கைது செய்தார்.

Next Story