உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி


உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி
x
தினத்தந்தி 29 Sept 2021 3:04 AM IST (Updated: 29 Sept 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட உள்ளதாக கட்சியின் மாநில அமைப்பாளர் தன்ராஜ் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி, செப்.29-
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட உள்ளதாக கட்சியின் மாநில அமைப்பாளர் தன்ராஜ் அறிவித்துள்ளார்.
புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் தன்ராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல்
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகித்தது. இன்று வரை அந்த கூட்டணியில் தான் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது புதுவையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று (நேற்று முன்தினம்) என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில தலைவர் ரங்கசாமி, அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
கடந்த  சட்டமன்ற தேர்தலில் போது பா.ம.க. 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்திருந்தது. பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மற்றும்  புதுவை    மாநில தலைவர்கள்   எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தோம். ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு எங்களை அழைக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
தனித்து போட்டி
இந்த நிலையில் பா.ம.க. உயர்நிலைக்குழு ஆலோசனை நடத்தியது. அதில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story