ஏமன் நாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது
ஏமன் நாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சாா்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அப்போது பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூரை சோ்ந்த குமரவேல் (வயது 31) என்பவரின் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, அவர் ஏமன் நாட்டில் இருந்து சார்ஜா வழியாக திருப்பி அனுப்பப்பட்டவர் என தெரியவந்தது.
விசாரணையில், குமரவேல் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவில் கட்டிட தொழிலாளியாக வேலைக்கு சென்ற நிலையில், விசா காலம் முடிந்தும் சவூதி அரேபியாவில் தங்கி இருந்ததும், சொந்த ஊருக்கு திரும்புவதற்கு சவூதி அரேபியாவில் காலாவதியான விசாவுடன் திரும்ப முடியாது என்பதால் போலி விசா மூலம் சொந்த ஊர் திரும்புவதற்கு ஏமன் நாட்டிற்கு சென்றுள்ளதும் தெரியவந்தது.
பின்னர், அங்கிருந்து போலி விசாவில் தமிழகம் திரும்ப முயன்ற போது, ஏமன் நாட்டு குடியுரிமை அதிகாரிகள் குமரவேல் போலி விசாவில் வந்திருப்பதை கண்டுபிடித்து சார்ஜா வழியாக திருப்பி அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு அவர் சென்றது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது குறித்து விமான நிலைய போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Tags :
Next Story