ஆர்டர்கள் இல்லாமல் தவிக்கும் செகண்ட்ஸ் பனியன் உரிமையாளர்கள்
திருப்பூரில் ஆர்டர்கள் இல்லாமல் செகண்ட்ஸ் பனியன் உரிமையாளர்கள் பலர் தவித்து வருகிறார்கள்.
திருப்பூர்
திருப்பூரில் ஆர்டர்கள் இல்லாமல் செகண்ட்ஸ் பனியன் உரிமையாளர்கள் பலர் தவித்து வருகிறார்கள்.
ஆர்டர்கள் இல்லாமல் தவிப்பு
திருப்பூரில் ஆடை தயாரிப்பு தொழில் சார்ந்து ஏராளமான தொழில்கள் இருந்து வருகின்றன. இதில் ஜாப் ஒர்க் தொழில்கள் மற்றும் ஆடை விற்பனை என்பது உள்பட பல்வேறு தொழில்களை பலரும் செய்து வருகிறார்கள். திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் உள்நாட்டு வர்த்தகமும் நடந்து வருகிறது.
இதில் ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டால் அந்த ஏற்றுமதியாளர், அந்த ஆடைகளை செகண்ட்ஸ் விற்பனை செய்கிறார்கள். இதுபோன்ற ஆடைகளை வாங்கி செகண்ட்ஸ் பனியன் உரிமையாளர்கள் பலர் குடோன்களில் வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தற்போது ஆர்டர்கள் பலரும் தவித்து வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகை
இதுகுறித்து காதர்பேட்டை செகண்ட்ஸ் பனியன் உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் குமார் கூறியதாவது
காதர்பேட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் உள்ளன. ஆயிரக்கணக்கானவர்கள் குடோன்களை வைத்து செகண்ட்ஸ் ஆடைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த பல மாதங்களாகவே கடும் சிரமத்தை சந்தித்து வந்தோம்.
இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததால் ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டு, இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்பியுள்ளது. இருப்பினும் ஆர்டர்கள் வரத்து இல்லாமல் பலரும் தவித்து வருகிறோம். ஆயுதபூஜைக்கு பின்னர் தான் தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள் வரும் வாய்ப்புள்ளது. இதற்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
------
Related Tags :
Next Story