புலி பயத்தால் கிராமம் வெறிச்சோடியது


புலி பயத்தால் கிராமம் வெறிச்சோடியது
x
புலி பயத்தால் கிராமம் வெறிச்சோடியது
தினத்தந்தி 29 Sept 2021 8:09 PM IST (Updated: 29 Sept 2021 8:09 PM IST)
t-max-icont-min-icon

புலி பயத்தால் கிராமம் வெறிச்சோடியது

கூடலூர்

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி தேவன்-1 பகுதியில் தொழிலாளியை கொன்ற புலியை பிடிக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதனிடையே கால்நடைகளை தொடர்ந்து புலி கொன்று வருவதால் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. நேற்று  முன்தினம் சுற்றி வளைக்கப்பட்ட  புலி திடீரென வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியது. 

 இதனை தொடர்ந்து மீண்டும் அந்த புலி தேவன்-1 கிராம பகுதிக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஏற்கனவே பாதுகாப்பு கருதி தேவன்-1 பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்கிற  உத்தரவு மீ்ண்டும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் தேவன்-1 கிராமம் வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர்ந்து பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். மேலும் புலியை விரைவாக பிடிக்க வேண்டுமென எதிர்பார்த்துள்ளனர். கடந்த சில தினங்களாக புலி குறித்த பீதியால் கிராம சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. 

இதேபோல் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவன்-1 தோட்டத் தொழிலாளி நாகரத்தினம் கூறியதாவது:-
பல தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். அருகே உள்ள வனப்பகுதியில் புலி நடந்து செல்வதை பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால் என்றைக்கும் இல்லாத வகையில் நாங்கள் வசிக்கும் வீட்டின் அருகே தொழிலாளி சந்திரனை புலி தாக்கிக் கொன்றது.

இதனால் வீட்டை விட்டு வெளியே வரவே பயமாக இருக்கிறது. தொடர்ச்சியாக கால்நடைகளை கொன்ற சமயத்தில் அச்சத்துடனேயே எஸ்டேட் வேலைக்கு சென்று வந்தோம். 

இதனால் எங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வெளியூரிலிருந்து கிராமத்துக்கு தாமதமாக வந்தால் மரண பயத்திலேயே வீடு வந்து சேர வேண்டிய நிலை உள்ளது. தற்போது புலியை பிடிக்கும் வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்மூலம் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story