மேலும் 2 பேராசிரியர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா
மேலும் 2 பேராசிரியர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை என 18 பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த நிலையில் வணிகவியல் பாடப்பிரிவு கவுரவ விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதனால் மற்ற பேராசிரியர்களுக்கும் தொற்று பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் என 154 பேரிடம் இருந்து மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் முடிவில் மேலும் 2 பேராசிரியர்கள், 2 கவுரவ விரிவுரையாளர்கள் என 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி ஏற்கனவே தடுப்பு நடவடிக்கையாக கல்லூரி மூடப்பட்டு இருக்கிறது. மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியானதால் மறு உத்தரவு வரும் வரை கல்லூரி திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறும்போது, கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடியும் தருவாயில் உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வாரம் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட வில்லை.
பேராசிரியர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றனர் என்றார். கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் லாரன்ஸ் பள்ளி உள்ளது. இங்கு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. தடுப்பு நடவடிக்கையாக பள்ளி ஒரு வாரம் மூடப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் என 500 பேரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் 4 பேருக்கும், மாணவர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டது.அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் மஞ்சூர் அரசு பள்ளியும் மூடப் பட்டது.
Related Tags :
Next Story