காட்டெருமை தாக்கி குதிரை பலி


காட்டெருமை தாக்கி குதிரை பலி
x
தினத்தந்தி 29 Sept 2021 9:55 PM IST (Updated: 29 Sept 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே காட்டெருமை தாக்கி குதிரை பலியானது.

கொடைக்கானல் :
கொடைக்கானல்  அருகே உள்ள வில்பட்டியை சேர்ந்தவர் மைக்கேல். விவசாயி. இவருக்கு சொந்தமான குதிரை ஒன்று, நேற்று மாலை கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. 

அப்போது அங்கு திடீரென்று வந்த காட்டெருமைகள் குதிரையை பயங்கரமாக தாக்கியதுடன் அதன் வயிற்றை குத்தி கிழித்தன. அதில் படுகாயமடைந்த குதிரை குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

பின்னர் காட்டெருமைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டன. இது குறித்து வனத்துறையினருக்கு மைக்கேல் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

 கொடைக்கானல் நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் அடிக்கடி காட்டெருமைகள் புகுந்து கால்நடைகளையும், பொது மக்களையும் தாக்கி வருகின்றன. இவைகளை நிரந்தரமாக விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Next Story