திண்டிவனம் அருகே கார் மோதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாவு


திண்டிவனம் அருகே கார் மோதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாவு
x
தினத்தந்தி 29 Sept 2021 9:55 PM IST (Updated: 29 Sept 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே கார் மோதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்தார்.

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தாள் மகன் ஏழுமலை (வயது 65). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் நேற்று முன்தினம் மாலை தீவனூரில் இருந்து ரெட்டணை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது,  திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார், ஏழுமலை மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.

சாவு

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஏழுமலை புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில்  ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story