ரேஷன் கடையை சேதப்படுத்திய யானைகள்


ரேஷன் கடையை சேதப்படுத்திய யானைகள்
x
தினத்தந்தி 29 Sept 2021 10:10 PM IST (Updated: 29 Sept 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே ரேஷன் கடையை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

பெரும்பாறை:

பெரும்பாறை அருகே உள்ள கே.சி.பட்டி, பெரியூர், நடுப்பட்டி, சேம்படி ஊத்து, கல்லக்கிணறு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. 

அதன்படி நேற்று காலை 2 யானைகள், அப்பகுதியில் உள்ள காபி தோட்டங்களில் திடீரென புகுந்தன. பின்னர் தோட்டத்தின் முள்வேலியை உடைத்து சேதப்படுத்தியதுடன் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு போன்ற பயிர்களை சேதப்படுத்தின. 

மேலும் பெரியூர் ஊராட்சி சந்தனபலாப்பட்டியில் உள்ள ரேஷன் கடை ஜன்னலை உடைத்து அங்கிருந்த 6 மூட்டை அரிசி, 5 கிலோ சீனி ஆகியவற்றை வெளியில் தூக்கி வீசி எறிந்து நாசப்படுத்தின. 

சிறிதுநேரத்தில் யானைகள் அங்கிருந்து சென்று விட்டன. யானைகளின் அட்டகாசத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த மலைக்கிராம மக்கள், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து அங்கு வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story