மலைக்கிராம மக்கள் மறியல் எதிரொலி; மலைப்பாதையில் வன அலுவலர் ஆய்வு


மலைக்கிராம மக்கள் மறியல் எதிரொலி; மலைப்பாதையில் வன அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Sept 2021 10:18 PM IST (Updated: 29 Sept 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே மலைக்கிராம மக்கள் மறியல் எதிரொலியாக மாவட்ட வன அலுவலர் மலைப்பாதையில் ஆய்வு செய்தார்.

பெரியகுளம்:
பெரியகுளம் அருகே அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, கருங்கல்பாறை, குறவன்குழி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு செல்வதற்கு உரிய சாலை வசதியின்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சோத்துப்பாறை அணை பகுதியில் இருந்து மலைக்கிராமங்களுக்கு செல்லும் வகையில் 4 கி.மீ. தூரம் வரை புதிதாக சாலை அமைப்பதற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தநிலையில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்க இருந்த நிலையில், வனத்துறையினர் அதற்கு தடை விதித்தனர். இதனால் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மலைக்கிராம மக்கள் நேற்று முன்தினம் சோத்துப்பாறை அணை முன்பு திரண்டனர். அப்போது சாலை அமைக்க தடை விதித்த வனத்துறையினரை கண்டித்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை ெதாடர்ந்்து போராட்டம் கைவிடப்பட்டது. 
இதற்கிடையே தேனி மாவட்ட வன அலுவலர் வித்யா நேற்று மலைக்கிராமங்களுக்கு செல்லும் பாதையை ஆய்வு செய்தார். அவருடன் பெரியகுளம் வனசரக அலுவலர் சாந்தக்குமார் மற்றும் அகமலை ஊராட்சி மன்ற தலைவர் லதா ரஞ்சித்பிரபு ஆகியோர் உடனிருந்தனர். 
இந்த ஆய்வை முடித்துவிட்டு சோத்துப்பாறை அணைப்பகுதிக்கு அவர் சென்றார். அப்போது அங்கு வந்த பழங்குடியின மலைவாழ் மக்கள், மாவட்ட வன அலுவலரை சந்தித்து சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Next Story