விவசாய கிணற்றில் ஆண் பிணம்


விவசாய கிணற்றில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 29 Sept 2021 10:45 PM IST (Updated: 29 Sept 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

பெரணமல்லூர் அருகே விவசாய கிணற்றில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா?என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் அருகே விவசாய கிணற்றில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா?என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் ஆண் பிணம்

பெரணமல்லூர் அருகே உள்ள மேல்மட்டை- விண்ணமங்கலம், சாலை பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம், மற்றும் விவசாய கிணறு, உள்ளது விவசாய கிணற்றில், நேற்று அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக அந்த பகுதி வழியாக சென்றவர்கள், கிராம நிர்வாக அலுவலர் பாபுவிற்கு, தகவல் தெரிவித்தனர், இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பாபு, பெரணமல்லூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

அதன்பேரில் பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், பெரணமல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், அங்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டனர்.

பிணமாக கிடந்தவருக்கு 45 வயதுவரை இருக்கும். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.இறந்தவர் நீல நிற லுங்கியும், வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார். முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கொலையா?

பிணமாக கிடந்தவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் தூக்கி வீசினரா? என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அது குறித்த விவரம் தெரியவரும்.

இந்த நிலையில் பிணமாக கிடந்தவர் யார் என்பது குறித்து அறிய பல்வேறு போலீஸ் நிலையங்களில் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை சேகரித்து வழக்கு பதிந்து பெரணமல்லூர் போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story