திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை பகுதியில் பறக்கும் படை சோதனையில் ரூ 2 லட்சம் சிக்கியது


திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை பகுதியில்  பறக்கும் படை சோதனையில் ரூ 2 லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 29 Sept 2021 10:47 PM IST (Updated: 29 Sept 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை பகுதியில் பறக்கும் படை சோதனையில் ரூ 2 லட்சம் சிக்கியது

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரத்தில் தாசில்தார் ஜெயலட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் வந்த விழுப்புரம் வண்டி மேடு பகுதியை சேர்ந்த இப்ராஹிம்(வயது 48) எந்தவித ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 900 வைத்திருந்ததை கண்டு பிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் சாம்ராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே திருவெண்ணெய்நல்லூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்த உலகரட்சகன்(வயது 21) என்பவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.77 ஆயிரம் வைத்திருந்ததை கண்டுபிடித்த பறக்கும்படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து உளுந்தூர்பேட்டை ஒன்றிய தேர்தல் நடத்தும் அதிகாரி சீனுவாசனிடம் ஒப்படைத்தனர்

Next Story