உத்தமபாளையம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


உத்தமபாளையம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 29 Sept 2021 11:56 PM IST (Updated: 29 Sept 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உள்ள அப்பிபட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் ஈஸ்வரன் (வயது 28). இவர், 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈஸ்வரன், அந்த சிறுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. 
இதில் காயமடைந்த அவர், சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அந்த சிறுமி கர்ப்பிணியாக இருப்பதும், இளம்வயதில் திருமணமானவர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தேனி குழந்தைகள் நல அலுவலர்களுக்கும், உத்தமபாளையம் அனைத்து மகளிர் ேபாலீசாருக்கும் டாக்டர்கள் தகவல் அளித்தனர். 
அதன்பேரில் சிறுமியை போலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் ,சிறுமியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் சிறுமி கொடுத்த புகாரின் பேரில், ஈஸ்வரனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Next Story