திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் 208 ஊராட்சிகளிலும் தடுப்பூசி முகாம்


திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் 208 ஊராட்சிகளிலும் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 29 Sept 2021 11:57 PM IST (Updated: 29 Sept 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடைபெறும் 208 ஊராட்சிகளிலும் தடுப்பூசி முகாம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் இது வரை முதல் தவணையாக 4,71,252 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 1,29,074 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 208 கிராம பஞ்சாயத்துகளிலும் தினமும் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப் பட உள்ளது. 

தினமும் காலை 9 மணி முதல் சம்மந்தப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு குக்கிராமம் வீதம் தடுப்பூசி பணி மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் எந்த இடத்தில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்பதனை ஊராட்சி செயலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே இந்த முகாம்களை பயன்படுத்தி கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போட்டு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story