வேலூர் மண்டலத்தில் இருந்து 25 குளிர்சாதன பஸ்கள் நாளை முதல் இயக்கம்


வேலூர் மண்டலத்தில் இருந்து 25 குளிர்சாதன பஸ்கள் நாளை முதல் இயக்கம்
x
தினத்தந்தி 29 Sept 2021 11:58 PM IST (Updated: 29 Sept 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

25 குளிர்சாதன பஸ்கள் நாளை முதல் இயக்கம்

வேலூர்

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் குளிர்சாதன வசதியுடன் இயங்கும் பஸ்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. தொற்று பரவல் குறைவு காரணமாக ஊரடங்கு கட்டுபாட்டுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டத்துக்கு உள்ளே, மாவட்டங்களுக்கு இடையே மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி 50 சதவீத இருக்கையுடன் குளிர்சாதன பஸ்கள் நாளை முதல் (வெள்ளிக்கிழமை) இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி வேலூர் அரசு போக்குவரத்துக்கு கழக மண்டலத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களுக்கு 25 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதையொட்டி குளிர்சாதன பஸ்களை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story