மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
தேவகோட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.
தேவகோட்டை,
விருதுநகர் மாவட்டம், பூலாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுருநாதன். இவருடைய மகன் செந்தூரான்(வயது 23). இவர் தேவகோட்டை வடக்கு சிலம்பணி அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாடியில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக அவரது கை பட்டுவிட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்ைச பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து தேவகோட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story