பிளஸ்-1 மாணவியை காதலன் உள்பட 4 பேர் பலாத்காரம் செய்த கொடுமை
பிளஸ்-1 மாணவியை காதலன் உள்பட 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பான ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி தங்கள் ஆசைக்கு இணங்கும்படி கூறிய மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்,
பிளஸ்-1 மாணவியை காதலன் உள்பட 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பான ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி தங்கள் ஆசைக்கு இணங்கும்படி கூறிய மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிளஸ்-1 மாணவி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (23) என்பவரும், அந்த மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. செல்வராஜ் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து செல்வராஜ், தான் காதலியுடன் உல்லாசம் அனுபவித்ததை தனது நண்பர்களான அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(23), பொன்னுசாமி(21), செந்தில்குமார் (24) ஆகிய 3 பேரிடம் கூறியுள்ளார்.
பாலியல் பலாத்காரம்
இதையடுத்து அவர்கள் 3 பேரும் அந்த மாணவியை காதலனுடன் உல்லாசம் அனுபவித்தது தங்களுக்கு தெரியும் என மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை வீடியோவும் எடுத்துள்ளனர்.
அந்த வீடியோ செல்வம்(28), சிவா(20) ஆகிய 2 பேருக்கும் சென்றுள்ளது. அவர்கள் அந்த, மாணவியிடம், தங்கள் இச்சைக்கு உடன்படாவிட்டால் முகநூலில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதாகவும் தெரிகிறது.
இது பற்றி அறிந்த அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே அந்த மாணவியின் தாயார் இது தொடர்பாக திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
2 பேர் கைது
பிளஸ்-1 மாணவியை மிரட்டி காதலனும், அவருடைய நண்பர்களும் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த விவகாரம் ெதாடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இதுதொடர்பாக காதலன் செல்வராஜ், அவருடைய நண்பர்கள் சிவக்குமார், பொன்னுசாமி, செந்தில்குமார் மற்றும் செல்வம், சிவா ஆகிய 6 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் செல்வம், சிவாவை கைது செய்தனர். மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவியை மீட்டு சிவகங்கையில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story