மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியிடம், அதே பகுதியை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியான மணிமாறன் (வயது26) என்பவர் நெருங்கி பழகியதுடன், அந்த மாணவியை மணிமாறன் கட்டாயப்படுத்தி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் பெரம்பலூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மணிமாறன் மீது புகார் அளித்தனர். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா விசாரணை நடத்தினார். மேலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மணிமாறன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று முன்தினம் கைது செய்தார். கைதான மணிமாறன் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story