கல்லூரி பஸ்சை கடத்திய 4 பேர் கைது
நன்னிலத்தில் கல்லூரி பஸ்சை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நன்னிலம்:
நன்னிலத்தில் கல்லூரி பஸ்சை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி பஸ் கடத்தல்
நாகை மாவட்டம் பாப்பாகோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பஸ் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மணவாளம்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பஸ் கடந்த 28-ந் தேதி காணாமல் போய்விட்டது. இதுகுறித்து பஸ் டிரைவர் ராஜசேகரன், நன்னிலம் போலீசில் புகார் செய்தார்.
நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
தேடுதல் வேட்டை
அப்போது அந்த பஸ் தஞ்சையை நோக்கி செல்வது தெரிய வந்தது. இந்தநிலையில் திருச்சி திருப்பாயத்துறை நெடுஞ்சாலையில் ரோந்து ெசன்ற போலீசார் அந்த வழியாக வந்த கல்லூரி பஸ்சை மறித்தனர். போலீசாரை பார்த்ததும் பஸ்சில் இருந்த 4 பேர் பஸ்சை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓடி விட்டனர்.
இதுகுறித்து திருச்சி போலீசார், நன்னிலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து கல்லூரி பஸ்சை நன்னிலம் போலீசார் மீட்டு வந்தனர். மேலும் பஸ்சை கடத்தியவர்களை பிடிக்க திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார்.
4 பேர் கைது
இந்த நிலையில் கல்லூரி பஸ்சை கடத்தியவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்தது நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் பல்லடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள அறிவொளி நகர் பகுதியில் பதுங்கி இருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் நன்னிலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் நன்னிலம் அருகே உள்ள திருக்கன்டீஸ்வரம் பகுதியை சேர்ந்த சத்தியஸ்ரீராம்(வயது 23), பல்லடம் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார்(22), அஷ்ரப்(22), சதீஷ்குமார்(23) என்பதும், இவர்கள் 4 பேரும் சேர்ந்து தனியார் கல்லூரி பஸ்சை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது இது தவிர வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story