தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்; வாழை, நெற்பயிர்கள் நாசம்


தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்; வாழை, நெற்பயிர்கள் நாசம்
x
தினத்தந்தி 30 Sept 2021 12:47 AM IST (Updated: 30 Sept 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து வாழை, நெற்பயிர்களை நாசம் செய்தன.

களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழ வடகரையை சேர்ந்தவர்கள் நல்லதம்பி (வயது 70), பாலன் (43). இவர்களுக்கு சொந்தமான விளைநிலங்கள் பூலாங்குளம் பத்துக்காட்டில் உள்ளது. அதில் அவர்கள் வாழை மற்றும் நெல் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளிவந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் அவர்களது விளைநிலங்களில் புகுந்து 100-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் நெற்பயிர்களை சேதப்படுத்தின. நாசமான வாழைகள் 5 மாதமே ஆன ஏத்தன் ரக வாழைகள் ஆகும். இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக இப்பகுதியில் காட்டுப்பன்றி, கடமான், சிறுத்தை, கரடிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் விளைநிலங்களில் வனவிலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வனவிலங்குகள் விளைநிலங்களுக்கு புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story