இலுப்பூர் பேரூராட்சி பகுதியில் கடைகளில் 17 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


இலுப்பூர் பேரூராட்சி பகுதியில் கடைகளில் 17 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Sept 2021 12:48 AM IST (Updated: 30 Sept 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

கடைகளில் 17 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அன்னவாசல்:
இலுப்பூர் பேரூராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷாராணி தலைமையில், பணியாளர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இலுப்பூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் 17 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. மேலும் இனிவரும் காலங்களில் இது போல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என செயல் அலுவலர் ஆசாராணி தெரிவித்தார்.

Next Story