சோழவந்தானில் மழையால் கடைகளின் மேற்கூரைகள் சரிந்து விழுந்தன


சோழவந்தானில் மழையால் கடைகளின் மேற்கூரைகள் சரிந்து விழுந்தன
x
தினத்தந்தி 30 Sept 2021 12:50 AM IST (Updated: 30 Sept 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தானில் மழையால் கடைகளின் மேற்கூரைகள் சரிந்து விழுந்தன

சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் கடைகள் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இங்கு இருந்த கடைகள் அருகில் உள்ள இடத்தில் தற்காலிக தினசரி மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை பெய்த மழையில் இங்குள்ள 6 காய்கறி கடைகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. அப்போது  அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த செல்லம்மாள் (வயது 45), லட்சுமி(26), திவ்யா (25), முனீஸ்வரி(29), ஜெனகைமாரி (60), கல்யாணி(45) ஆகிய 6 பேர், ஒரு குழந்தை மற்றும் காய்கறி வாங்க வந்த 4 பெண்கள் உள்பட 11 பேர் இடிந்து விழுந்த கூரைக்குள் சிக்கி க்கொண்டனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் வந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த கூரை விழுந்த இடத்தில் குறுக்கே மின்சார வயர் சென்றது. அதுவும் அறுந்து விழுந்தது. ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  இதில் 6 கடைகளில் உள்ள காய்கறிகள் சேதமடைந்தது. எனவே புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி மார்க்கெட்டை உடனடியாக திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story